இலங்கை
விமானம் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள் : இருவர் கைது!

விமானம் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள் : இருவர் கைது!
விமானம் மூலம் குஷ் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு பேர், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (20) இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து வந்த விமானத்தில் இந்த நாட்டிற்கு வந்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரபொல மஹா ஓயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும், கட்டுவன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும் ஆவர்.
பெண் சந்தேக நபரிடம் 3 கிலோகிராம் 750 கிராம் மெத்தம்பேட்டமைனும், ஆண் சந்தேக நபரிடம் 2 கிலோகிராம் 880 கிராம் மெத்தம்பேட்டமைனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.