Connect with us

இலங்கை

உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி

Published

on

Loading

உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி

  ஹட்டன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி இருப்பது நேற்று (21) கண்டறியப்பட்டது.

இந்நிலையில் உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

Advertisement

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தட்டில் இறந்த கரப்பான் பூச்சி இருப்பதாக உணவக ஊழியர்களுக்கு கூறியபோதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து வாடிக்கையாளர் காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் காவல்துறை அதிகாரிகள் உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவம் தொடர்பில், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு அறிவிக்கப்பட்டது. பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, உணவகத்தை சுகாதாரமற்ற முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.   

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன