இலங்கை
கொழும்பு மோசடி விசாரணைப்பிரிவின் உத்தியோகத்தர் கைது

கொழும்பு மோசடி விசாரணைப்பிரிவின் உத்தியோகத்தர் கைது
கொழும்பு மோசடி விசாரணைப்பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் 20 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை மேம்பாலத்துக்கு அருகில் வைத்து அவர் நேற்று மதுவரித்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.