இலங்கை
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்!

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பிளாஸ்ரிக் அற்ற வலயத்தை உறுதிப்படுத்தும் விதமாக இம்முறை கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்துக்கான வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 15ஆவது ஆண்டாக இந்த வருடமும் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 45 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 350க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு, நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருள்கள் மற்றும் சேவைகள் இம்முறை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இம்முறை கூடுதலான நிலப்பரப்பில் கூடுதலான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் முதல் பல்வேறுபட்ட புதிய ஏற்பாடுகள் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (ப)