இலங்கை
தொடர்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!

தொடர்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!
யாழ் – வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரியவயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இதுவரை எவரையும் நெல்லியடி பொலிஸார் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
திருடர்களால், அரச சொத்தான சிறிலங்கா ரெலிலொம் இணைப்பு கேபிள்கள் அறுக்கப்படுவதனால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாகவும், அரச சொத்துக்கள் நாசமாக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. (ப)