Connect with us

விளையாட்டு

உலக பிக்கில் பால் லீக்: சத்யபாமா பல்கலையுடன் கூட்டு; தனது அணி ஜெர்சியை வெளியிட்ட சமந்தா!

Published

on

Chennai Super Champs

Loading

உலக பிக்கில் பால் லீக்: சத்யபாமா பல்கலையுடன் கூட்டு; தனது அணி ஜெர்சியை வெளியிட்ட சமந்தா!

பிக்கில் பால் விளையாட்டு அணியை சென்னை சத்தியபாமா பல்கலைகழகத்துடன் இணைந்து வாங்கியுள்ள நடிகை சமந்தா, அந்த பல்கலைகழகத்தில் நடைபெற்ற தொடங்க விழாவில் தனது அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளார்.டேபிள் டென்னிஸ் மற்றும் டென்னிஸ் ஆகிய இரண்டு போட்டிகளையும் இணைத்து விளையாடுவது போன்ற விளையாட்டாக இருக்கும் பிக்கில் பால், போட்டி தற்போது உலகளவில் பிரபலமாகி வரும் நிலையில், இந்த போட்டிக்கான தொடர் வரும் ஜனவரி 24-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் சென்னை, புனே, ஹைததராபாத், டெல்லி, பெங்களூரு மற்றும் அகமதாபாத் என 6 அணிகள் பங்கேற்றுள்ளன.இந்த அணிகளில் சென்னை அணியை, பிரபல நடிகையுயும், தொழில் முனைவோருமான சமந்தா, சத்தியபாமா பல்கலைகழகத்துடன் இணைந்து வாங்கியுள்ளார். சென்னை சூப்பர் சேம்ப்ஸ் என்று பெரிடப்பட்டுள்ள இந்த அணிக்கான நிகழ்ச்சி, சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், அணியின் உரிமையாளரான சமந்தா, அணியின் அனல் பறக்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஜெர்சியை வெளியிட்டார்.உலக பிக்கில் பந்து லீக் (WPBL) தொடக்க விழாவிற்கு முன்னதாக, சத்யபாமா பல்கலைக்கழகம் சென்னை சூப்பர் சேம்ப்ஸ்அணியின் முதன்மை கூட்டாளியாக அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஜெர்சி சென்னையை வரையறுக்கும் விளையாட்டு மீதான அனல் பறக்கும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது, ஜனவரி 24, அன்று லீக் தொடங்கும் போது சென்னை சூப்பர் சேம்ப்ஸ் இந்த ஜெர்சியுடன் மைதானத்தில் களமிறங்க உள்ளது.இது குறித்து, சமந்தா கூறுகையில், “சென்னையில் ஈடு இணையற்ற ஒரு சூழல் உள்ளது – உற்சாகமான, அனல் பறக்கும், எப்போதும் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இது சென்னை சூப்பர் சேம்ப்ஸ் ஜெர்சி பிரதிபலிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பிக்கில் பந்து என்பது வேடிக்கை, போட்டி மற்றும் உடற்தகுதிக்காக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான விளையாட்டு. மேலும் சென்னை சூப்பர் சேம்ப்ஸ் முன்னிலை வகிப்பதைப் பார்ப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்துவது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது எங்கள் தொலைநோக்கு கூட்டாண்மைக்கு மற்றொரு முன்னோடி அத்தியாயத்தை சேர்க்கிறது, இளைஞர்களிடம் பிக்கில் பந்து விளையாட்டை எடுத்துச் சென்று அவர்களின் ஆற்றலுடன் விளையாட்டை வளர்க்கிறது. ஒன்றாக, நாங்கள் சென்னையின் விளையாட்டு ஆர்வத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளார்.A post shared by Samantha (@samantharuthprabhuoffl)சென்னை சூப்பர் சேம்ப்ஸ் தலைமை பயிற்சியாளர் ஜோய் ஃபரியாஸ் கூறுகையில், “சென்னை சூப்பர் சேம்ப்ஸ் பெருமையுடனும் உறுதியுடனும் நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது. நகரத்திலிருந்தும் இப்போது சத்தியபாமா பல்கலைக்கழகத்திலிருந்தும் கிடைக்கும் ஆதரவும் உற்சாகமும் சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் வீரர்களின் சிறந்து விளங்கும் உந்துதலைத் தூண்டும். உலக அரங்கில் அணியின் திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.சென்னை சூப்பர் சேம்ப்ஸ் முழு அணி:சோனு குமார் விஸ்வகர்மா (இந்தியா),எட்வர்ட் பெரெஸ் (அமெரிக்கா), டேனர் டோமாசி (அமெரிக்கா), சாரா ஜேன் லிம் (பிலிப்பைன்ஸ்), அன்னா கிளாரிஸ் பேட்ரிமோனியோ (பிலிப்பைன்ஸ்), எட்டியென் பிளாஸ்கெவிச் (கனடா), தாடியா லாக் (யுகே), டைரா கால்டர்வுட் (ஆஸ்திரேலியா) தலைமை பயிற்சியாளர்: ஜோய் ஃபாரியாஸ் (அமெரிக்கா)சென்னை சூப்பர் சேம்ப்ஸ் லீக் போட்டிகள்:ஜனவரி 24 – சென்னை சூப்பர் சேம்ப்ஸ் vs பெங்களூரு ஜவான்ஸ்,  ஜனவரி 26 – சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் vs டில்லி தில்வாலே, ஜனவரி 28 – சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் vs மும்பை பிக்கிள் பவர், ஜனவரி 29 – சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் vs புனே யுனைடெட், ஜனவரி 31 – சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் vs ஹைதராபாத் சூப்பர் ஸ்டார்ஸ்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன