Connect with us

பொழுதுபோக்கு

எனக்கு வருத்தம் தந்த படம் இதுதான்: நானே படத்தை கேலி செய்தேன்: மனம் திறந்த கௌதம் மேனன்!

Published

on

Gautham and Dhanush

Loading

எனக்கு வருத்தம் தந்த படம் இதுதான்: நானே படத்தை கேலி செய்தேன்: மனம் திறந்த கௌதம் மேனன்!

மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கௌதம்மேனன், கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருக்கும் நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தனக்கு விருப்பமாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கியிருந்தார். அவ்வப்போது தனது அபிமான நடிகராக கமல்ஹாசன் குறித்து பேசி வரும் கௌதம் மேனன், மீண்டும் அவரது நடிப்பில் படம் இயக்க வேண்டும் என்று அவ்வப்போது கூறி வருகிறார்.Read In English: Gautham Vasudev Menon admits he regrets making Dhanush-starrer Enai Noki Paayum Thota: ‘I’ve been joking about it because…’கௌதம் மேனனின் தாய் மொழி, மலையாளம் என்றாலும், அவர் இதுவரை மலையாளத்தில் எந்த படத்தையும் இயக்காத நிலையில், அடுத்து மம்முட்டி நடிப்பில் வெளியாக உள்ள டோமினிக் அண்ட் ‘தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின மூலம் கௌதம் மேனன், மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த படத்தில் மம்முட்டி நாயகான நடித்துள்ளார்.இதனிடையே சமீபத்திய நேர்காணலில், கவுதம் மேனன், இரண்டு புகழ்பெற்ற நடிகர்களுடன் பணியாற்றுவது பற்றியும், தனக்குள் இருக்கும் ரசிகர்களை முறியடித்து முதலில் ஒரு இயக்குநராக இருப்பது பற்றியும் மனம் திறந்து பேசினார். வேட்டையாடு விளையாடு படத்தை ஒரு ரசிகர் படமாக நான் பார்க்கவில்லை. அந்த படத்தில் நிச்சயமாக, கமல் சாரின் நுணுக்கங்களால் உயர்த்தப்பட்ட சில தருணங்கள் இருக்கிறது. ஆனால் ரசிகர் அந்த காட்சியை எடுத்துக்கொள்ள நான் விடமாட்டேன்.இருப்பினும், கமல் ஹாசன் மற்றும் மம்மூட்டி போன்றவர்களுடன் பணிபுரியும் போது ஒருவித மிரட்டல் உணர்வு இருந்தது. “கமல் சாருடன், மம்மூட்டி சாருடன், ஒரு குறிப்பிட்ட காட்சியை நான் எப்படி விரும்புகிறேன் என்பது பற்றிய விவாதம் உள்ளது. உண்மையில், கமல் சாருடன், வெங்கடேஷ் சாருடன் (கர்ஷனா) பணியாற்றியது தான், மம்மூட்டி சாருடன் பணிபுரிய என்னைத் தயார்படுத்தியது,” சிலம்பரசன் டி.ஆர் போன்ற நடிகர்களுடன் பணிபுரிவதை விட இது வேறுபட்டது என்று கூறியுள்ளார்.இந்த நேர்காணலில், தனுஷ் நடிப்பில் தான் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பற்றி பேசிய கௌதம் மேனன், “என்னை நோக்கி பாயும் தோட்டா (2019) படத்திற்காக நான் வருந்துகிறேன், அந்த படத்தை பற்றி நான் கேலி செய்திருக்கிறேன். ஆனால், நான் எனது பொறுப்புகளில் இருந்து விலகவில்லை, அந்தப் படத்தை நான் சொந்தமாக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் என் விருப்பம். அதைத் தவிர, எந்த வருத்தமும் இல்லை, அதேபோல் எந்த  சரிபார்ப்பையும் நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.தனுஷ் நடிப்பில் வெளியான இந்த படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் சுனைனா நடித்திருந்தனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டி ஜான் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன