Connect with us

இலங்கை

கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது

Published

on

Loading

கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் ‘பேட்மேன்’ என்று சுவர்களில் எழுதப்பட்ட ஒரு குறிப்பின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

Advertisement

உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 26வது மாடியில் அமைந்துள்ள நான்கு அலுவலகங்களில் கடந்த 17 ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நுணுக்கமான விசாரணையின் முடிவில், ​​சந்தேக நபரால் திருடப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட மூன்று மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களை பொலிஸாரினால் மீட்க முடிந்தது.

விசாரணையின் போது, ​​திருட்டுகள் நடந்த ஒவ்வொரு அலுவலகத்தின் சுவர்களிலும் ‘BAT MAN’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

Advertisement

அதன்படி, உலக வர்த்தக மையத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, கடந்த ​​17 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கட்டிடத்திற்குள் நுழைவதைப் பார்த்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

சந்தேக நபர் சாவியை எடுத்து, நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து, சுமார் 3 மில்லியன் ரூபா மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளைத் திருடியது சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

திருட்டைச் செய்த பிறகு, ஒவ்வொரு அலுவலகத்தின் சுவரிலும் ‘BAT MAN’ என்ற வாசகம் எவ்வாறு வந்தது என்ற விடயமும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

Advertisement

சந்தேக நபர் உலக வர்த்தக மையத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பில் அறிந்த ஒருவர் என்று பொலிஸ் அதிகாரிகள் ஊகித்திருந்தனர்.

அதன்படி, அங்கு முன்னர் பணிபுரிந்தவர்களின் பேஸ்புக் கணக்குகளை சோதனை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர், மேலும் ‘BAT MAN’ படம் அடிக்கடி இடம்பெறும் ஒரு கணக்கு பொலிஸ் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் எரித்திரியா வம்சாவளியான சூடானைச் சேர்ந்த 23 வயது காலித் ரியால் முகைதீன் என பொலிஸாரினால் அடையாளம் காண முடிந்தது.

Advertisement

கொழும்பில் உள்ள ஒரு கெசினோ விடுதிக்கு அருகில் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தக மையத்தில் மீன் ஏற்றுமதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்ததாக குறிப்பிட்டார்.

அவர் அங்கு பணிப்பாளராக பணியாற்றியதாகவும், அதனால் ஏனைய அலுவலகங்கள், பாதுகாப்பு மற்றும் சாவி சேமிப்பு இடம் பற்றி அறிந்திருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், திருடப்பட்ட பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்று, அந்தப் பணத்தை சூதாட்ட விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன