இலங்கை
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை மார்ச் மாதத்திலிருந்து சரக்குக்கப்பல் சேவை!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை மார்ச் மாதத்திலிருந்து சரக்குக்கப்பல் சேவை!
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே சரக்குக் கப்பற்சேவையொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஏ அன்ட் என் லாஜிஸ்டிக்ஸ்;’ என்ற நிறுவனத்தால் இந்தச் சரக்குக் கப்பற்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ‘தாரா கிரண்’ என்ற 700 தொன் இடையுற்ற கப்பலே இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இந்தக் கப்பற்சேவைக்கான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் பயணிகள் சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் மேற்குறித்த நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.