இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது; வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது; வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
https://doenets.lk என்ற இணையதள முகவரியில் இருந்து பெறுபேறுகளை பார்வையிடலாம்.
இந்த பரீட்சைக்கு 323,900 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர், 319,248 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 51,244 மாணவர்கள் தேர்வில் சித்தி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.