திரை விமர்சனம்
மிடில் கிளாஸ் பையனின் அவஸ்தை.. மணிகண்டனின் குடும்பஸ்தன் ட்விட்டர் விமர்சனம்

மிடில் கிளாஸ் பையனின் அவஸ்தை.. மணிகண்டனின் குடும்பஸ்தன் ட்விட்டர் விமர்சனம்
இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே பல முக்கிய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் நாளை பல படங்கள் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
அந்தப் படங்களில் குடும்பஸ்தன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைலர் காமெடி கலாட்டா கலந்து வெளிவந்த நிலையில் பிரிவியூ ஷோவை பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் அனைவரும் மணிகண்டனின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே குட் நைட் லவ்வர் படங்கள் இவருக்கு வெற்றியாக அமைந்தது.
அதை அடுத்து குடும்பஸ்தன் இந்த வருடத்தின் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்தி வருகின்றனர். ஏனென்றால் படத்தில் காமெடி கலாட்டாவிற்கு பஞ்சம் இருக்காது.
ஒரு மிடில் கிளாஸ் பையனின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படையாக காட்டி இருக்கிறார் இயக்குனர். அதேபோல் அக்மார்க் குடும்பஸ்தனாக மாறியிருக்கிறார் மணிகண்டன்.
எதார்த்தமான கதையை அனைத்து தரப்பு ஆடியன்ஸும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கின்றனர். இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசித்து என்ஜாய் செய்யலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்து வரும் நிலையில் மணிகண்டனுக்கு இந்த வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.