Connect with us

சினிமா

இன்ஸ்டா பிரபலத்திற்கும் விஜய்க்கும் இப்படி ஒரு உறவா? வைரல் புகைப்படம்

Published

on

Loading

இன்ஸ்டா பிரபலத்திற்கும் விஜய்க்கும் இப்படி ஒரு உறவா? வைரல் புகைப்படம்

தளபதி விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.தற்போது அரசியலிலும் தீவிரமாக இறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய் 2026 தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.இவரின் அரசியல் பயணம் சூடுபிடித்து வரும் நிலையில், விஜய் குறித்து எந்த தகவல் அல்லது புகைப்படம் வந்தாலும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் உடன் ஒரு பெண் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.அதற்கு முக்கிய காரணம் அவர் அந்த புகைப்படத்தில் அத்தை என்று ஷோபாவை குறிப்பிட்டு போட்ட பதிவு தான். அவர் வேறு யாருமில்லை, விஜய்யின் தாய் மாமன் மகள் பல்லவி சுரேந்தர் தான்.பல்லவி சுரேந்தர் டப்பிங் கலைஞராகவும் பாடகராகவும் உள்ள வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது துபாயில் வசித்து வருகிறார்.சமீபத்தில், இவர் ஷோபா மற்றும் எஸ் ஏ சந்திரசேகருடன் சேர்ந்து காசு மேல காசு கீழே என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.         

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன