பொழுதுபோக்கு
ஐ ஆம் ஸ்ட்ராங் வுமன்: ஏன்னா…? சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!

ஐ ஆம் ஸ்ட்ராங் வுமன்: ஏன்னா…? சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்!
சன் டிவியில் ஒளிபரப்பான “ரோஜா” என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் கடந்த 2022-ல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா அடுத்து ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆனாலும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில், பிரியங்கா தனது காதலவர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.அவரது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணத்திற்கு பின் மலேசியாவில் செட்டில் ஆனார்.அதன்பிறகு தற்போது ஜீ தமிழின் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இந்த சீரியலும் முடிவுக்கு வந்தது. தற்போது ரோஜா 2 சீரியலில் நடித்து வருகிறார்,சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.