Connect with us

சினிமா

திருப்பதியில் திருமணம், 3 குழந்தை பெற்றுக்கொண்டு.. ஜான்வி கபூர் உடைத்த ரகசியம்

Published

on

Loading

திருப்பதியில் திருமணம், 3 குழந்தை பெற்றுக்கொண்டு.. ஜான்வி கபூர் உடைத்த ரகசியம்

பாலிவுட் மூலம் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிப்பில் தேவரா முதல் பாகம் சமீபத்தில் வெளிவந்தது.ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூருக்கு தேவரா திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.இதை தொடர்ந்து ராம் சரண் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அறிமுகமாவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தன் திருமணம் குறித்து சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் ஜான்வி பேசிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.அதில், ” எனக்கு என் திருமணத்தை திருப்பதியில் செய்து கொள்ள தான் விருப்பம். கணவர் மற்றும் 3 குழந்தைகளை பெற்று கொண்டு திருமலையில் செட்டில் ஆகி அங்கு அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும்.அது தான் என் கனவு” என்று தெரிவித்துள்ளார். ஜான்வி அடிக்கடி திருப்பதி கோவிலில் தன்னுடைய காதலருடன் சென்று வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன