Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது.

இன்று (24) ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள்

புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, புகைப்படத்தினூடு கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர் நாடா வெட்டி வைக்கப்பட்டு புகைப்பட கண்காட்சி ஆரம்பமாகியது.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் தூதுவர் கலந்து சிறப்பித்தார்.

Advertisement

அத்துடன், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் மற்று பார்வையாளர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன