Connect with us

இலங்கை

வவுனியாவில் பெண்களிடம் வழிப்பறிக் கொள்ளை; பொலிஸார் துரித நடவடிக்கை

Published

on

Loading

வவுனியாவில் பெண்களிடம் வழிப்பறிக் கொள்ளை; பொலிஸார் துரித நடவடிக்கை

  வவுனியா – ஓமந்தை பகுதியில் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (23) முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

வவுனியா – ஓமந்தை A9 வீதியில் நேற்று (23) முற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அவசர இலக்கமான 107 இற்கு தொடர்பு கொண்டு முறையிட்டனர்.

உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப் பிடித்துள்ளனர்.

Advertisement

கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன