Connect with us

இலங்கை

180 கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி உலக சாதனை படைத்த 8 வயது மாணவன்!

Published

on

Loading

180 கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி உலக சாதனை படைத்த 8 வயது மாணவன்!

அபாகஸ் முறை மூலம் 180 பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி இலங்கையை சேர்ந்த 8 வயது மாணவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

 மாத்தளை களுதாவளை பகுதியில் வசித்து வரும் தினேஸ்ராஜ் மற்றும் ஷெரின் ஆகியோரின் 8 வயது மகனான நிஷ்விக் மாத்தளையில் இயங்கி வரும் எஸ்.ஐ.பி அபாகஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கற்று வருகிறார்.

Advertisement

 தொடர் பயிற்சியின் காரணமாக கணக்கிடுவதில் இவருக்கிருந்த வேகத்தினை கவனித்த இவரது ஆசிரியர்களான சங்கரப்பிரியா மற்றும் சுரேந்திரன் போன்றோர் இவரது திறமையை உலக சாதனைமாகப் பதிவு செய்ய முடிவெடுத்தனர்.

images/content-image/2024/1737734417.jpg

 இதற்கான நிகழ்வு கொழும்பு T B ஜயா மாவத்தையில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. 

 இதன்போது மாணவன் நிஷ்விக் மூன்று மற்றும் இரண்டு எண்களை ஒரு எண்ணினால் பெருக்கியும் மூன்று எண்களை ஒரு எண்ணால் வகுத்தும் 3 நிமிடங்களில் 180 கணக்குகளுக்கு சரியான விடையளித்தார்.

Advertisement

இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா மற்றும் பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷனின் இயக்குநர் க்ளோரன்ஸ் சாமூவேல் போன்றோர் உலக சாதனையாக உறுதி செய்தனர்.

images/content-image/1737734434.jpg

 அதன்பின்னர், சாதனை மாணவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

அத்துடன், சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு எஸ்.ஐ.பி. அபாகஸ் பயிற்சி மையத்தின் நிர்வாகத் தலைவர்கள் பரிசளித்துப் பாராட்டினார்கள்.

Advertisement

images/content-image/2024/1737734456.jpg

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன