Connect with us

விளையாட்டு

2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆண்கள் அணியை அறிவித்த ICC

Published

on

Loading

2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆண்கள் அணியை அறிவித்த ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான ICC விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ICC அறிவித்திருந்தது. அதன்படி, 2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆண்கள் அணியை ICC அறிவித்துள்ளது. 

Advertisement

ஆச்சரியமளிக்கும் வகையில் இதில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம் பெறவில்லை.

இந்த அணியில் அதிகபட்சமாக இலங்கை வீரர்கள் 4 பேரும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தலா 3 பேரும் இடம் பிடித்துள்ளனர். 

இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாகவும், குசல் மெண்டிஸ் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அணி விவரம்: சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) பதும் நிசாங்கா (இலங்கை), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர், இலங்கை), சரித் அசலங்கா (கேப்டன், இலங்கை), ஷெர்பேன் ரூதர்போர்டு (வெஸ்ட் இண்டீஸ்), அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஷாகின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹாரிஸ் ரவூப் (பாகிஸ்தான்), அல்லா கசன்பர் (ஆப்கானிஸ்தான்).

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன