விளையாட்டு
IND vs ENG: ஆடும் லெவனில் மாற்றம்? சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்; சென்னையில் மழை பெய்யுமா?
IND vs ENG: ஆடும் லெவனில் மாற்றம்? சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்; சென்னையில் மழை பெய்யுமா?
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG 2nd T20I Date, Live Streaming: Playing XI prediction, head-to-head stats, pitch report and weather updateஇந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது வானிலை முன்னறிப்பு சென்னை சேப்பாக்கத்தில் நாளை (ஜனவரி 25) மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. வானம் லேசான மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும். சென்னை ஆடுகளம் எப்படி? சேப்பாக்கம் ஆடுகளத்தில் பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இருப்பினும், சமீபத்தில் மைதானம் புதிதாக கட்டமைக்கப்பட்ட போது, பேட்டிங் செய்வதற்கு சாதகமாக ஆடுகளம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நிலைமையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை குவிக்க முடியும். அதே போல், சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.இரவு நேரத்தில் போட்டி நடைபெறுவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174 ஆகும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் தலா 1 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. அதனால், டாஸ் வெல்லும் கேப்டன் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங் செய்து நன்றாக செயல்படுவது வெற்றியை கொடுக்கலாம்.நேருக்கு நேர் இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய 25 போட்டிகளில், இந்தியா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து 11 போட்டிகளில் வென்றுள்ளது. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: இங்கிலாந்து: பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன்/ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட். இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி/வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி. ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.
