விளையாட்டு
IND vs ENG LIVE Score, 2nd T20I: ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? சென்னையில் இங்கிலாந்துடன் மோதல்
IND vs ENG LIVE Score, 2nd T20I: ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? சென்னையில் இங்கிலாந்துடன் மோதல்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது சொந்த மண்ணில் டி20 தொடரை ஆடி வரும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கொல்கத்தாவில் வெற்றியுடன் முதல் போட்டியை தொடங்கி இருக்கிறது. எனவே, சென்னையிலும் அதே ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். அதேநேரத்தில், இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, வெற்றிப் பாதைக்கு திரும்ப இங்கிலாந்து போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: இங்கிலாந்து: பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன்/ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட். இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி/வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி. ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.
