இலங்கை
கட்டு துப்பாக்கிக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி காயம் ; சந்தேக நபர் கைது

கட்டு துப்பாக்கிக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி காயம் ; சந்தேக நபர் கைது
பதுளை மீகஹகிவுல – அக்கலாஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் நேற்று (26) சட்டவிரோத மதுபான உற்பத்திச் செய்யும் இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், கட்டு துப்பாக்கிக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அக்கலாஉல்பத, ஹந்துன்வகாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (27) மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் தற்போது பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.