பொழுதுபோக்கு
ஜன நாயகன் என்ட்ரி: ‘மக்கள் தலைவர்’ கேரக்டரில் விஜய்: தளபதி 69 டைட்டில் அப்டேட்!

ஜன நாயகன் என்ட்ரி: ‘மக்கள் தலைவர்’ கேரக்டரில் விஜய்: தளபதி 69 டைட்டில் அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Read In English: Thalapathy 69 titled Jana Nayagan: Vijay steps into the role of ‘leader of the masses’தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கததில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 1992-ம் ஆண்டு வெளியான இந்த படம் விஜய்க்கு, நல்ல அறிமுக படமாக அமைந்தது. இதனைத் எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய் பல படங்களில் நடித்திருந்தார்.ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய விஜய், பூவே உனக்காக, கில்லி, திருமலை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக விஜய் அரசியலில் ஈடுபட உள்ளார், புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வந்தது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரின் 69-வது படம் தான் சினிமாவில் அவரது கடைசி படம். தற்காலிமாக இந்த படத்திற்கு தளபதி 69 என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜயுடன், பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும், மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியா மணி, நரேன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்தரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயரிடப்படுவதாக தகவல்கள் வெளியானது. இப்படி வந்தால், விஜயின் முதல் மற்றும் கடைசி படம் நாளைய தீர்ப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.#JanaNayagan pic.twitter.com/cs51UDEi1Qஇதனிடையே, குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று தளபதி 69 படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தீர்ப்பு என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஜன நாயகன் என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் முடித்து அரசியல் பணிகளில் ஈடுபட உள்ள விஜய், அதற்கு ஏற்றவாறு ஜனநாயகம் பேசும் வகையில், தனது கடைசி படத்திற்கு ஜனநாயகன் என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.