Connect with us

இலங்கை

நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வழக்குகளுக்கு இந்த அரசாங்கம் உயிர் கொடுக்கிறது – நாமல்!

Published

on

Loading

நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வழக்குகளுக்கு இந்த அரசாங்கம் உயிர் கொடுக்கிறது – நாமல்!

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோஷித்த ராஜபக்ஷவை பார்வையிட்டப்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

ஏனெனில் கடந்த காலங்களை காட்டிலும் இந்த மாதம் தான் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. 

 நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் , அந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரசியல் பழிவாங்களுக்காக இவ்வாறு கைது செய்து மக்களின் மனங்களை வெல்வதற்கு முயற்சிக்கிறது.

Advertisement

 சட்டத்தை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு கேவலமடைய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

 நல்லாட்சி அரசாங்கத்தின் போது எம்மீது சுமத்தப்பட்ட போலியான வழக்குகளுக்கு இந்த அரசாங்கம் உயிர் கொடுக்க முயற்சிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன