இலங்கை
மத்தியஸ்த சபையில் மோதல்; அடிதடியில் பறிபோன உயிர்

மத்தியஸ்த சபையில் மோதல்; அடிதடியில் பறிபோன உயிர்
மாத்தறை திஹகொட பகுதியில் மத்தியஸ்த சபைக்குச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (25) பிற்பகல் திஹகொட, பெத்தங்கவத்தை விகாரையில் நடைபெற்ற மத்தியஸ்த சபை அமர்விலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் திஹகொட பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.