Connect with us

பொழுதுபோக்கு

வெளியே போன ராதிகா, மயூ: ஹேப்பி மோடில் இனியா; பாக்கியலட்சுமி ப்ரமோ வைரல்!

Published

on

Gopi radhika and Backia

Loading

வெளியே போன ராதிகா, மயூ: ஹேப்பி மோடில் இனியா; பாக்கியலட்சுமி ப்ரமோ வைரல்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அடுத்த வார எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது,3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, பாக்யாவுடனான வாழ்க்கை பிடிக்காமல், தனது பள்ளி தோழி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு, பல பிரச்னைகளை சந்தித்த கோபி, ஆபீஸ் லாஸ் ஆகி, பெரும் சிரமத்தை எதிர்கொண்டாலும், பாக்யா தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை கண்டார். இதை பார்த்து கோபியும், பொறாமையில், பாக்யாவுக்கு எதிராக சதியில் ஈடுபட்டார்.இதன் ஒரு பகுதியாக பாக்யாவின் ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன இறைச்சியை கலந்த கோபி, இந்த வழக்கில், மாட்டிக்கொண்டார். அதன்பிறகு, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கோபியை பாக்யா காப்பாற்றியதை தொடர்ந்து, பாக்யாவின் வீட்டிலேயே தங்கிய கோபி, தனது அம்மாவின் பாசத்தை மீண்டும் பெற்றார். அதே சமயம், ராதிகாவின் வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் இருந்தார். இதை பார்த்த பாக்யா, கோபிக்கு அட்வைஸ் கொடுத்தார்.ஒரு பக்கம் பாக்யா, கோபியை மீண்டும் ராதிகாவுடன் சேர்த்து வைக்க போராடி வரும் நிலையில், ஈஸ்வரி, பாக்யாவை மீண்டும் கோபியுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் ராதிகாவிடம் நீ கோபியை விட்டு விட்டு சென்றுவிடு என்று ஈஸ்வரி சொல்லி வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது,இதில், பாக்யா நமக்கு கொடுத்த 10 நாட்கள் கெடு நாளையுடன் முடிகிறது. நாம நாளைக்கு இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று சொல்ல, இதை கேட்ட இனியா, டாடி நீங்க இங்கேயே இருங்க, எங்களை விட்டு போகாதீங்க என்று சொல்லி அழுகிறாள். அதன்பிறகு, மறுநாள் நான் திங்ஸ் எடுத்து வருகிறேன் என்று கோபி சொல்ல, நீங்க இங்கு தான் இருக்க போறீங்க கோபி, நானும் மயூவும் தான் இங்கிருந்து போகிறோம் என்று சொல்ல கோபி அதிர்ச்சியாகிறார்.மேலும், உன் அப்பாவை உன்னிடமே விட்டுவிடுகிறேன் இனியா என்று ராதிகா சொல்கிறாள். இதை கேட்ட இனியா, ராதிகாவை கட்டிபிடித்துக்கொள்ள, ராதிகா மயூவுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அத்துடன்இந்த ப்ரமோ முடிவடைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன