இலங்கை
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழில் இருந்து இருவர்

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழில் இருந்து இருவர்
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழில் இருந்து இருவரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமித்துள்ளார்.
அதன்படி இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி. மகேந்திரன் திருவரங்கன் மற்றும் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ் ஆகியோரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்திக்கவுள்ளனர்.
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு , குறித்த இருவரும் தெரிவுசெய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.