இலங்கை
ஈ-டிக்கெட் மோசடி; கைதான சுற்றுலா வழிகாட்டிக்கு பிணை

ஈ-டிக்கெட் மோசடி; கைதான சுற்றுலா வழிகாட்டிக்கு பிணை
இலங்கை ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஈ-டிக்கெட்டுகளை ஒன்லைனில் சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்லைனில் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளை வெளிநாட்டினருக்கு 27,000 ரூபாவுக்கு விற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கண்டி குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட்டார்.
பின்னர் சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டார்.
அதேவேளை ஈ-டிக்கெட் மோசடி சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.