Connect with us

விளையாட்டு

கோ கோ உலக கோப்பை 2025: கோவை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published

on

kho kho world cup 2025 coimbatore player subramani grand welcome Tamil News

Loading

கோ கோ உலக கோப்பை 2025: கோவை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச கோப்பு கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக கோ கோ உலகக் கோப்பை போட்டி ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 24 வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.இந்நிலையில், இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவுவில் இந்தியா நேபாள அணிகளும், பெண்கள் பிரிவில் இந்தியா – நேபாள அணிகளும் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறி ஆட்டத்தில் இரண்டு பிரிவிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், தொடக்க கோ கோ உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.கோ கோ உலகக் கோப்பையில் வெற்றி வாகை  சூடிய இந்திய அணிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் இரு அணியினரையும் நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்தார். இதேபோல், பிரதமர் மோடி சர்வதேச கோ கோ கூட்டமைப்புக்கும், இந்திய அணி வீரர் வீராங்கனைகளுக்கு பாராட் தெரிவித்தார். இந்நிலையில், கோ கோ உலகக் கோப்பை வென்ற இந்திய ஆண்கள் அணியில் தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சுப்பிரமணி (21) இடம் பெற்றார். இந்தப் பெருமையை கல்லூரிக்கு தேடித்தந்த வீரர்  சுப்பிரமணியை கவுரவப்படுத்தும் நிகழ்வாக அவர் படிக்கும் கல்லூரியின் கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்வின் வரவேற்பு உரையினை கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை தலைவர் அர்ஜுனன் வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ இரத்தினமாலா தலைமை உரையினை வழங்கினார். கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜேந்திரன் வெற்றி வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். “நம் கல்லூரியின் உலகக்கோப்பை சாதனை நாயகன் இந்திய கோ கோ அணியின் வீரர் வி.சுப்பிரமணி, மற்றும் கே.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் கோ.கோ வீரர் எஸ்.சந்துரு இருவரும் கல்லூரி வழங்கிய இலவச கல்வி சலுகை தொடர் ஒத்துழைப்பு பெற்றோர்களின் உறுதுணை இவ்வெற்றியை ஈட்டுவதற்கு ஊக்கமளித்தது” என்று அவர் தனது  உரையில் கூறினார். இந்த நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்று வெற்றி நாயகனை வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர். நிறைவாக கே.ஜி கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் சுரேஷ் நன்றி உரையை வழங்கினார்.செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன