இலங்கை
நீண்ட நாட்களின் பின் பொது நிகழ்வில் முகம் காட்டிய கோட்டாபய!

நீண்ட நாட்களின் பின் பொது நிகழ்வில் முகம் காட்டிய கோட்டாபய!
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகள், இலங்கையில், வெகுசிறப்பாக இடம்பெற்ற நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
இந்திய உதவி உயர்ஸ்தானிகர், டாக்டர் சத்யஞ்சல் பாண்டே தலைமையில், கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், நேற்று (26) இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அத்துடன் குடியரசு திஅனத்தையொட்டி இந்தியன் இல்லத்தில் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது.
அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அனுர அரசசின் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அருகருகே அமர்ந்து உரையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீண்ட காலத்தின் பின் பொது நிகழ்வில் கலந்துகொண்ட சந்த்ர்ப்பம் இதுவாகும்.