Connect with us

உலகம்

மருத்துவமனை மீது தாக்குதல்; 70 பேர் உயிரிழந்த சோகம்!

Published

on

Loading

மருத்துவமனை மீது தாக்குதல்; 70 பேர் உயிரிழந்த சோகம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 27/01/2025 | Edited on 27/01/2025

ஆப்ரிக்க நாடான சூடானை கடந்த 2021ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில் சூடானின் எல்ஃபஷர் நகரத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்த ஒரேயொரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. 

Advertisement

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் நேற்று (26.01.2025) வெளியிட்டிருந்த பதிவில், “சூடானின் எல்-ஃபஷர் நகரத்தில் இயங்கி வரும் ஒரேயொரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் தகவல் தொடர்பு வசதிகளில் குறைபாடுகள் உள்ளன. இதனால் காரணமாக அந்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாவதில் சிக்கல் நிலவுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.  

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • நக்கீரன் 25-01-25

  • மருத்துவமனை மீது தாக்குதல்; 70 பேர் உயிரிழந்த சோகம்!

  • “மீனவர்களின் எதிர்காலத்தை இருண்டதாக ஆக்கியுள்ளது” – முதல்வர் வேதனை! 

  • எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

  • இன்றைய ராசி பலன் -27.01.2025

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன