Connect with us

இலங்கை

முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குத் தாக்கல்!

Published

on

Loading

முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குத் தாக்கல்!

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 ஜனவரி 8ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

ஒரு குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அதிகாரசபையின் செலவில் 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகள் அச்சிடப்பட்டதன் மூலம் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு ரூ. 128,520 நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மற்றொரு குற்றச்சாட்டு ஊழல் குற்றத்தை உள்ளடக்கியது, இதில் ஜெயரத்ன மஹாவெவ Weehena Farm (பிரைவேட்) லிமிடெட் இற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலம் ரூ. 360,000 கட்டணம் செலுத்தியுள்ளதால், நஷ்டம் ஏற்படுத்தியது தொடர்பானது.

 மேலும் மற்றைய வழக்கு, முன்னாள் அமைச்சர் சிலாபத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியின் கணக்கில் ரூ. 494,000 வரவு வைத்ததன் மூலம் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபைக்கு நஷ்டம் உண்டாக்கிய குற்றச்சாட்டாகும்.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன