இலங்கை
முல்லைத்தீவில் நாயை மரத்தில் தூக்கிட்டு கொன்ற பெண் கைது

முல்லைத்தீவில் நாயை மரத்தில் தூக்கிட்டு கொன்ற பெண் கைது
முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய பெண்ணை மாங்குளம் பொலிஸார் கைது செய்தனர்.
மாங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.