இலங்கை
யோஷித ராஜபக்ச கைதில் அரசில் தலையீடு இல்லை

யோஷித ராஜபக்ச கைதில் அரசில் தலையீடு இல்லை
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்
யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசியல் தலையீடு எதுவும் இருக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
‘கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவுக்கு விலங்கிட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியது என தகவல் வெளியாகியுள்ளதே?’ என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அமைச்சரோ, அமைச்சின் செயலாளரோ அல்லது ஜனாதிபதியே எவ்வித தலையீடுகளும் செய்யவில்லை. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை இடம்பெற்றது.
கடந்த காலங்களில் சிற்சில காரணங்களால் தேக்கமடைந்திருந்த சில விசாரணைகள் தற்போது, அரசியல் தலையீடுகள் இன்றி துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்த விசாரணைகளின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-என்றார்.