சினிமா

ஆண்களை பெண்கள் கொடுமைப்படுத்துறாங்க.. ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் நடிகை ரேகா நாயர்..

Published

on

ஆண்களை பெண்கள் கொடுமைப்படுத்துறாங்க.. ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் நடிகை ரேகா நாயர்..

இரவின் நிழல் படத்தில் ஆடையில்லா காட்சியில் நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேகா நாயர். பல யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து பல விஷயங்களை பேசி விமர்சனத்திற்கும் உள்ளாகினார் ரேகா.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆண்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள், பெண்கள் அவர்களை கொடுமைப்படுத்தி வருதாக கூறியிருக்கிறார் ரேகா.இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள்தான் பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண் அழுது கொண்டே போலீஸ் நிலையம் சென்றால் ஆண் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தால் அந்த பெண்ணுக்குத்தான் அங்கு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் அந்த ஆண் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டான் எவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளானான் என்று அவர்கள் பேசமாட்டார்கள்.ஆண்களின் குரலை கேட்பதற்கான சமூகம் இதில்லை, ஆண்களின் குறையை யாரும் கேட்பதேயில்லை. மேலும் எத்தனையோ பெண்கள் தன் கணவன்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பலருக்கு தெரியாது. ஆண்களின் செல்போனை வாங்கி பெண்கள் பார்க்கிறார்கள். இதே ஒரு ஆண் பார்த்துவிட்டால் பெண்கள் உடனே விவாகரத்து என்று போய்விடுகிறார்கள்.பெண் எங்கு போனாலும், ஆன் எங்கே போகிறாய் என்று கேட்டால், நான் எங்கு வேண்டுமானாலும் போவேன், இருக்க இஷ்டம் இருந்தால் இரு இல்லை என்றால் போய்விடு என்று பெண்கள் பேசுவிடுகிறார்கள். பெண்களின் வீட்டிலும் கணவன் திட்டினால் வீட்டுக்கு வந்துவிடு என்கிறார்கள்.இதை ஆண்கள் வெளியில் சில்ல முடியாதபடி தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் ஆண்கள் மிகவும் பாவம் என்று ரேகா பேசியுள்ளார். இதற்கு ஆண்கள் பலர் ஆதரவு அளித்தாலும் பெண்கள் பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version