Connect with us

பொழுதுபோக்கு

உண்மையை உடைத்த கோபி: ஈஸ்வரிக்கு வந்த கோபம்: ராதிகா முடிவு என்ன?

Published

on

radhika and easwari

Loading

உண்மையை உடைத்த கோபி: ஈஸ்வரிக்கு வந்த கோபம்: ராதிகா முடிவு என்ன?

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ட்ரிப் போன இடத்தில் பாக்யாவின் குடும்பம் சந்தோஷமாக இருக்க, இனியா, ஈஸ்வரியிடம் வாங்க ராட்டினம் சுத்தலாம் என்று சொல்லி அழைத்து செல்கிறாள். அதன்பிறகு பாக்யா, இனியா, ராதிகா ஆகியோர் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா இனியாவிடம் மன்னிப்பு கேட்க, இனியாவும் பரவாயில்லை என்று சொல்கிறாள்.அதன்பிறகு, உனக்கு என்ன படிக்க தோனுதோ அதை படி, இடையில் டான்ஸிரும் கவனம் செலுத்து என்று சொல்லி, இனியாவுக்கு ராதிகா அட்வைஸ் கொடுக்கிறாள். இதன் பிறகு ராதிகா எல்லோருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்கிறாள். குடும்பம் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ராதிகாவும் சந்தோஷப்பட, இவரை பார்த்த பாக்யா நீங்க ஓகே தானே என்று கேட்க, நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் வேற ஒன்னும் இல்லை என்று சொல்கிறாள்.அடுத்து எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்கும்போது பாக்யா பலூனை குறி பார்த்து சுட, இதை கோபி, தனது அம்மா ஈஸ்வரியிடம் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறான். இதை கேட்ட ஈஸ்வரி, பாக்யா முன்ன மாதிரி இல்லை. இப்ப ஸ்கூட்டில சந்திர மண்டலத்திற்கே போய் வருவாள் என்று சொல்கிறாள். அடுத்து எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்கின்றனர். வீட்டுக்கு வந்ததும் கோபியிடம், இன்றைக்கு ட்ரிப் நல்ல இருந்துச்சு என்று ஈஸ்வரி சொல்கிறாள்.கோபியும் இதேபோன்று, மீண்டும் ஒரு ட்ரிப் போக வேண்டும் என்று சொல்கிறான். ஆனால் எங்க குடும்பம் மட்டும் தான் போக வேண்டும் என்று சொல்லி ஈஸ்வரி ராதிகாவை பார்க்கிறாள். இதை கேட்ட கோபி, இந்த ட்ரிப்பை அரேஞ்ச் செய்ததே ராதிகாதான். அவதான் எல்லாமே செஞ்சா என்று சொல்ல, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடடுவாளா? வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதற்கே இவள் தான் காரணம், இப்போ இவளாளதான் ட்ரிப் போனோமா என்று கேட்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன