பொழுதுபோக்கு
குயின் ஆஃப் இன்ஸ்டா இவர் தானாம்: ரீன்ட் க்ளிக்ஸ் எப்படி இருக்கு பாருங்க!

குயின் ஆஃப் இன்ஸ்டா இவர் தானாம்: ரீன்ட் க்ளிக்ஸ் எப்படி இருக்கு பாருங்க!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி, தற்போது வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தயில் கவனம் ஈர்த்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் வி.ஜே.சித்ரா. ஒரு கட்டத்தில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக முல்லை கேரக்டரில் நடிக்க வந்தவர் தான் காவ்யா அறிவுமணி.சித்ரா இடத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர், சில மாதங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறினார்.சினிமாவில் பட வாய்ப்பு அதிகரித்ததால் காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், மிரள் மற்றும் ரிபப்பரி ஆகிய படங்களில் நடித்தார் காவியா அறிவுமணி.தற்போது அவர் அளவுக்கு அதிகமாக க்ளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.