சினிமா

மொத்தத்துல சிம்புவிற்கு மட்டும் கிலோ கணக்கில் கொடுத்த அல்வா.. தண்ணி காட்டிய கௌதம் மேனன்

Published

on

மொத்தத்துல சிம்புவிற்கு மட்டும் கிலோ கணக்கில் கொடுத்த அல்வா.. தண்ணி காட்டிய கௌதம் மேனன்

சிம்பு ஏற்கனவே ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனத்துடன் மூன்று படங்கள் பண்ணுவதாக ஒரு அக்ரீமெண்ட் போட்டிருந்தனர். இந்த அக்ரிமெண்ட் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் போடப்பட்டது. ஆனால் இப்பொழுது சிம்பு மற்றும் கௌதம் மேனன் இருவருக்கும் மனக்கசப்பு இருந்து வருகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என மூன்று படங்கள் இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ளது. இதில் கடைசி படத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அதன் பிறகு சேர்ந்து வேலை செய்யப் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள்.

Advertisement

வேல்ஸ் நிறுவனம் வெந்து தணிந்தது காடு படத்திற்குப் பிறகு இன்னும் இரண்டு படங்கள் பண்ணி தருமாறு சிம்புவிடம் அக்ரிமெண்ட் போட்டுள்ளது. ஆனால் இன்றுவரை சிம்பு அவர்களுக்கு கால் சீட் கொடுக்கவில்லை, கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் திரும்பத் தரவில்லை என்ற புகார் நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் சிம்பு எல்லாத்துக்கும் ஒத்துக் கொண்டார். அதனால் இந்த பஞ்சாயத்து அந்த சமயத்தில் முடிவுக்கு வந்தது. இப்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு ஹீரோ ஜெயம் ரவி யாம்.

வெற்றிமாறன் கதையை இப்பொழுது கௌதம் வாசுதே மேனன் இயக்குகிறார். அந்த படத்தில் தான் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். ஏற்கனவே சிம்பு கால் சீட் இருந்தும் கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை. மொத்தத்தில் சிம்பு இந்த கதைக்கு வேண்டாம் என்ற முடிவில் மட்டும் இருக்கிறார்கள்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version