Connect with us

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆரும் கலைஞரும் செய்தது: விஜய் செல்லும் பாதை சரிதான்: இயக்குனர் பார்த்திபன்!

Published

on

Vijay Parthiban

Loading

எம்.ஜி.ஆரும் கலைஞரும் செய்தது: விஜய் செல்லும் பாதை சரிதான்: இயக்குனர் பார்த்திபன்!

விஜயின் ஜனநாயகன் அரசியலுக்கான ட்ரெய்லர், பராசக்தி  படத்தில் பெயரை வைப்பது உடன்பாடு இல்லை, பெரியார் என்றும் பெரியார் தான் என்று, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கூறியுள்ளார்.புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை திரைப்பட இயக்குனர் பார்த்திபன் இன்று சந்தித்தார். சட்டமன்ற வளாகத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பார்த்திபன், புதுச்சேரி மையப்படுத்தி ஒரு திரைப்படம் தயாரிக்க இருக்கிறேன். இதற்கு அரசின் உதவி கிடைத்தால் சுலபமாக இருக்கும் என்று கேட்டுள்ளேன். அவர் கனிவுடன் இந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டார். புதுச்சேரி அரசின் முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார் என குறிப்பிட்டார்.தனது புதிய படத்தின் கதாநாயகன் நான் தான். இது ஒரு காதல் கதை. முழுக்க முழுக்க புதுவையில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது. படத்தின் 99% இங்கு தான் படபிடிப்பு நடத்தப்படும் என்று கூறிய அவரிடம், அரசியல் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பார்த்திபன், எந்த ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்தாலும் ஒரு சந்தேகம் இருக்கும்.அந்த ஒரு சந்தேகம் தான் விஜய் மீது இருந்தது. நான் சந்தேகப்படவில்லை. கூட்டம் வரும். ஆனால் அதன் பிறகு நிலைப்பார்களா என்று ஒரு சந்தேகம் இருக்கும். அப்படி ஒரு சந்தேகம் இருக்க வேண்டாம்.அரசியலுக்கு வருபவர்களை என்கரேஜ் பண்ண வேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யாரு வேண்டுமானாலும் முதலமைச்சராக ஆசைப்படலாம். தப்பு கிடையாது . அதனால் விஜயை அலோ பண்ணுவோம் அவர் வேகத்துக்கு செல்லட்டும் அவருக்கு நிச்சயமாக தடை இருக்கும் சாதாரண இடம் கிடையாது. அரசியலில் பெரிய இடத்திற்கு செல்வது என்றால் தடை இல்லாமல் இருக்காது.ஜல்லிக்கட்டுக்கு பல தடைகளை தாண்டி தான் மாடு பிடிக்க வேண்டி உள்ளது. அமைச்சரவை பிடிப்பது என்பது மிக எவ்வளவு பெரிய விஷயம் அதனால் தடைகளை தாண்டினால் தான் ரியல் சேலஞ்ச் அதுதான் தலைவனுக்கான அழகு. அதனால் விஜய் செல்லும் பாதை சரிதான் என கூறினேன். ஆளுங்கட்சி விமர்சனம் செய்தால்தான் அடுத்த இடத்திற்கு வர முடியும். எம்ஜிஆரும் கலைஞரும் அதைத்தான் செய்தார்கள். அதைவிடுத்து பம்பி கொண்டு. இது நல்லா இருக்காது. நல்லா இருக்கு என கூறி ஒரு தலைவர் வர முடியாது.. கடுமையான போராட்டத்திற்கு பிறகு தான் வர முடியும். நான் விஜய் சப்போர்ட் செய்யவில்லை.முதலில் ஸ்டாலினுக்கு கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் மஞ்சள் துண்டு போட்டு அடுத்த தலைவர் என்று கூறினேன். அதேபோல் யார் வந்தாலும் பாராட்டுவேன். உடனே விஜயிடம் ரெண்டு பெட்டி வாங்கின மாதிரி அர்த்தம் கிடையாது. என்னுடைய அரசியல் நோக்கம் என்பது வேறு. ஏற்கனவே இல்லாததை விட இன்னும் சிறப்பாக ஒன்று அமைய வேண்டும்.அதுதான் முக்கியம். எனக்கு கவனம் சினிமாவில் மட்டும்தான்.விஜய் இதுவரை இரண்டு மேடை தான் ஏறி இருக்கார். ஒரு மேடையில் அவர் சென்சேஷனாக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. கொஞ்சம் கூட தவறில்லாமல் அவர் பேசியது மிகப்பெரிய ஆச்சரியம். பேசி பேசி முன்னுக்கு வந்த நாடுதான். அரசியல் என்றால் பேச்சு தான் அது நன்றாக பேசுகிறார். எப்போதும் இங்கு கூடும் கூட்டம் ஓட்டு போடும் என்பது ஆச்சரியமான விஷயம் இதுவரை நிறைய பேர் வந்து இருக்கிறார்கள் இவர் வருகிறார் என்ன நடக்குது என்று பார்ப்போம்.பெரியார் என்பவர் சமூகத்தில் ஒதுக்க முடியாதவர். அதை எதிர்ப்பது என்று கூறுவது வேறு ஒரு அரசியல் இருக்கலாம். யாரோ ஒருத்தர் கூறுவதை வைத்து கருத்து கூற முடியாது. பெரியார் என்பது எப்போதும் பெரியார் தான். ஜனநாயகன் என்ற படம் ஒரு ட்ரெய்லர். தலைப்பு நன்றாக இருக்கு சவுக்கு வைத்திருக்கும் போஸ்டர் நண்பருக்கு அரசியலுக்கான ஆரம்ப ட்ரெய்லராக கருதுகிறேன் அதனால் பாராட்டுவோம்பராசக்தி என்றால் அந்தப் படம் மட்டுமே. மறுபடியும் ஒரு பராசக்தி என்பது அதனுடைய நிழலாக தான் இருக்கும். நிஜம் என்றால் அந்த பராசக்தி மட்டுமே. பழைய படத்தில் பெயரை வைப்பது எனக்கு உடன்பாடு இல்லை. நான் எப்போதும் புதிதாக சிந்திப்பேன். கதை மட்டுமல்ல தலைப்பும் புதிதாக சிந்திப்பேன். அதனால் தான் என்னுடைய புதிய படத்திற்கு 54 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என பெயர் வைத்துள்ளேன்.மயிலிறகு ஒரு பெண். 54 என்பது என்னுடைய வயது பெயர். புதிதாக தலைப்பை யோசிக்காமல், பழைய பெயர் வைப்பது தவறு. அதற்கு தற்போது எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. பராசக்தி என்றால் கலைஞர். அதற்கு மேல் கருத்து கூற முடியாது என்றும் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன