Connect with us

பொழுதுபோக்கு

ரோஹினிக்கு விழுந்த அடி: காரை பறிகொடுத்த முடித்து: மீனாவின் முயற்சி வெற்றியாகுமா?

Published

on

siragadikka AAsa

Loading

ரோஹினிக்கு விழுந்த அடி: காரை பறிகொடுத்த முடித்து: மீனாவின் முயற்சி வெற்றியாகுமா?

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய எபிசோட்டில் ரோஹினிக்கு பேய் பிடித்துள்ளதாக நினைத்து ஒரு சாமியாரை வர வைத்த நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், போய் ஓட்ட வரும் சாமியார், சமீபத்தில் வீட்டில் யாராவது இறந்தார்களா என்று கேட்க, அதற்கு விஜய, ஆமாம் ரோஹினி அப்பா இறந்துவிட்டார் என்று சொல்ல, அவரது ஆத்மா தான் இப்போது இவரது உடலில் இருக்கிறது என்று சொல்ல, ரோஹினியை அடிக்கிறார். இவன் சரியான போலி சாமியார், ஆனா இப்போ இதை வெளியிலும் சொல்ல முடியாதே என்று அடியை வாங்கிக்கொள்கிறார் ரோஹினி.மேலும், மனோஜ்ஜிடம் ஒரு குச்சியை கொடுத்து தினமும் ரோஹினியின் காலில் அடிக்குமாறு சொல்கிறார். வலி தாங்க முடியாமல் ரோஹினி அலற, இப்படி காலில் அடித்தால் தான் ஆத்மா வெளியில் போகும் என்று சாமியார் அடிக்கிறார். வலி தாங்காத ரோஹினி, ரூமுக்குள் சென்று அழுதுக்கொண்டு இருக்கிறாள். அடுத்து முத்து தனது காரில் வந்த கஷ்டமர் ஒருவர் அப்பா இறந்துவிட்டதாகவும், ட்ரெய்னை பிடிக்க வேண்டும் இல்லை என்றால், அவர் முகத்தை பார்க்க முடியாது என்று சொல்கிறார்.இதை கேட்ட முத்து வேகமாக கார் ஓட்டிச் செல்கிறார். அப்போது நோ என்ட்ரியில் சென்றால், ஏற்கனவே முத்துவிடம் பிரச்னை செய்த ட்ராபிக் போலீஸ், முத்துவிடம் காரை நிறுத்துமாறு சொல்லிக்கொண்டு பின் தொடர்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் காரை நிறுத்தி சாவியை பிடுங்கிக்கொண்டு காரையும் சீல் வைக்கிறார். இதனால் சோகமாக வீட்டுக்கு வரும் முத்து, மீனாவிடம் இதை சொல்ல, நீங்கள் நோ என்ட்ரியில் போனது தப்பு என்று மீனா அட்வைஸ் செய்கிறாள்.மீனாவின் அட்வைஸை கேட்டு கோபப்படும் முத்து, அவளை திட்டிவிட்டு செல்கிறான். அடுத்து, ஸ்ருதி தனது திருமண நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து ரவியிடம் ப்ளான் போட்டுக்கொண்டு இருக்கிறாள். இந்த பக்கம் மீனா. கடந்த முறை, முத்துவை காப்பாற்றிய போலீஸ் வீட்டுக்கு சென்று, அவருடைய மனைவிக்கு பூ கொடுத்துவிட்டு நடந்ததை சொல்லி, மீண்டும் உதவுமாறு கேட்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன