Connect with us

பொழுதுபோக்கு

கோபியை பிரியும் ராதிகா: இனியா கொடுத்த ரியாக்ஷன்; பாக்யாவுக்கு சாதகமா? பாதகமா?

Published

on

Gopi radhika Iniya

Loading

கோபியை பிரியும் ராதிகா: இனியா கொடுத்த ரியாக்ஷன்; பாக்யாவுக்கு சாதகமா? பாதகமா?

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை நிரந்தரமாக பிரிய முடிவு செய்துள்ள ராதிகா,  அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரின் நிலையை பார்த்து, பாக்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இதுவரை கோபி வேண்டும் என்று, பல அவமானங்களை தாங்கிக்கொண்டு இருந்த ராதிகா, தற்போது கோபி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கான விளக்கமும் கொடுத்துவிட்டார். அதன்பிறகு, ஈஸ்வரி கோபியிடம் வந்து ராதிகா என்ன சொன்ன என்று கேட்க, அவ முடிவில் மாற்றம் இல்லை. இந்த வீட்டை விட்டு போக முடிவு செய்துவிட்டாள் என்று சொல்கிறான்.இதை கேட்ட ஈஸ்வரி அடிக்கடி என்னை வந்து பாரு, உடம்பை கவனித்துக்கொள் என்று சொல்லி அட்வைஸ் செய்து சாப்பாடு கொடுக்கிறாள். அதேபோல் இனியாவும் கோபி போவதை ஏற்றுக்கொண்டு, தைரியமாக பேச, ராதிகா மயூ இருவரும் பெட்டியுடன் கீழே இறங்கி வருகின்றனர். இதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக, இனிமேல் நான் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன் என்று பாக்யாவிடம் ராதிகா சொல்கிறாள்.மேலும் ஒரு தோழியா நீங்க எனக்கு பலமுறை உதவி செய்திருக்கீங்க, ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் பலமுறை நான் உங்களை கஷ்டப்படுத்தி இருக்கிகேன். கோபி மட்டும் இல்லை. என்னாலையும் தான் உங்களுக்கு தொந்தரவு. ஆனாலும் நீங்கள் செய்த நல்லதை மறக்க மாட்டேன் என்று ராதிகா சொல்கிறார். அதன்பிறகு, ராதிகா வந்தவுடன், கோபி தனது லக்கேஜை எடுக்க செல்கிறான். அதற்கு ஈஸ்வரி நீ மாடிப்படி ஏற வேண்டாம் என்று சொல்லி செழியனை போய் எடுத்து வர சொல்கிறாள்.இதை பார்த்த ராதிகா, யாரும் கோபியின் லக்கேஜை எடுக்க வேண்டாம். அது அங்கேயே இருக்கட்டும் என்று சொல்ல, அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். நானும் மயூவும் தான் வீட்டை விட்டு போகிறோம். நீங்கள் இங்கேயே இருங்கள் என்று கோபியிடம் ராதிகா சொல்கிறாள். உங்கள் உடல்நிலை பார்த்து தான் நான் இந்த வீ்டுக்கு வந்தேன். இங்கே வந்த பிறகு, நீங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்கனு தெரிஞ்சிக்கிட்டேன். எங்களுடன் இருக்கும்போது வேறு விதமாக இருப்பீங்க. ஆனால் இந்த வீட்டில் நீங்க சந்தோஷமா இருக்கீங்க என்று சொல்ல, கோபி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறான்.இறுதியாக இனியாவிடம் உங்க அப்பாவை உன்னிடமே விட்டுவிட்டு போகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் எடுத்த இந்த முடிவு உங்களுக்கு சாதகமாக பாதகமா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் ரொம்ப நல்லவங்க என்று சொல்லிவிட்டு கிளம்ப, ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டு, கட்டி அணைத்துக்கொள்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன