Connect with us

பொழுதுபோக்கு

வீரா Vs தனம்: ஜீ தமிழ் சீரியல் கதையை பட்டி டிங்கரிங் பார்த்த விஜய் டி.வி; ப்ரமோ வீடியோ ட்ரோல்!

Published

on

Zee tamil Veera and Dhanam

Loading

வீரா Vs தனம்: ஜீ தமிழ் சீரியல் கதையை பட்டி டிங்கரிங் பார்த்த விஜய் டி.வி; ப்ரமோ வீடியோ ட்ரோல்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களுக்கு இணையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜீ தமிழில் தனித்துவமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது வீரா சீரியல். ஆட்டோ ஓட்டி குடும்பத்தை கவனித்து வந்த அண்ணன் பாண்டியன் மறைவுக்குப் பிறகு தங்கை வீரா ஆட்டோ ஓட்டி தன்னுடைய குடும்பத்தை கவனிக்க தொடங்கியுள்ளார்.தற்போது அண்ணன் பாண்டியன் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து மாறனை காப்பாற்ற போராடி வருகிறாள் வீரா. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தனம் என்ற பெயரில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. ஸ்ரீகுமார் மற்றும் சத்யா ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.இந்நிலையில் இந்த சீரியல் ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் இது ஜீ தமிழின் வீரா சீரியல் போன்று உள்ளது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வீரா சீரியல் அண்ணன் ஓட்டிய ஆட்டோவை வீரா ஓட்ட இங்கே கணவன் ஓட்டிய ஆட்டோவை தனம் ஓட்டுவது போல் காட்டப்படுகிறது. வீரா சீரியலில் ஹீரோயின் கதாபாத்திரத்தின் பெயரை டைட்டிலாக வைத்துள்ள நிலையில் தனம் சீரியலிலும் ஹீரோயின் பெயரையே டைட்டிலாக வைத்துள்ளனர்.உங்க அண்ணன், இங்க புருஷன் அவ்வளவு தான்.. வேற ஒன்னு வித்தியாசம் இல்லையே என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் கதாபாத்திரத்தை எல்லோரும் தியாகி என கலாய்த்து வந்த நிலையில் அதையும் தற்போது நினைவுக்கு கூர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜீ தமிழ் சீரியலை மற்ற சீரியல் காப்பி அடிப்பது போல், படங்களில் வரும் காட்சிகளை காப்பியடிப்பது ஜீ தமிழின் வழக்கம்.ஏற்கனவே சத்யா சீரியலில் தெறி படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதேபோன்று பல சினிமா காட்கள் சீரியலில் வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்தின் அதிசய பிறவி படத்தின் காட்சிகளை ஜீ தமிழின் மாரி சீரியலில் பயன்படுத்தி இருந்தனர். இந்த காட்சிக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன