வணிகம்
பட்ஜெட் 2025: உங்களுக்கு ஏற்ற வரி விதிப்பு முறையை தேர்வு செய்து விட்டீர்களா? முழு விவரம் இதோ!

பட்ஜெட் 2025: உங்களுக்கு ஏற்ற வரி விதிப்பு முறையை தேர்வு செய்து விட்டீர்களா? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் 2025 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி முறையைத் தேர்வு செய்யலாமா அல்லது பலவிதமான விலக்குகள் வழங்கும் பழைய வரி முறையைத் தொடரலாமா என்பதை வரி செலுத்துவோர் மதிப்பீடு செய்து வருகின்றனர். வரி செலுத்துவோர் தங்கள் நிதி நிலைமையின் அடிப்படையில் இரண்டு அமைப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்ய, இந்திய வருமான வரி அமைப்பு 2020-21 அனுமதி அளிக்கிறது.புதிய வரி முறை கூறுவது என்ன?வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 115BAC இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறை, குறைக்கப்பட்ட வரி விகிதங்களுடன் வரிவிதிப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறைவான விலக்குகள் வழங்கும் வகையில் வருகிறது. இது வரிச் சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்யாத வரி செலுத்துவோருக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.2023 பட்ஜெட்டில், புதிய முறைக்கு மாறுவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்க அரசு முக்கிய மாற்றங்களைச் செய்தது.2023 பட்ஜெட்டில் முக்கிய மாற்றங்கள்:அதிக வரி தள்ளுபடி வரம்பு: பிரிவு 87A இன் கீழ், ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக தள்ளுபடி உயர்த்தப்பட்டது, இதன் மூலம் தனிநபர்கள் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள்.புதுப்பிக்கப்பட்ட வரி அடுக்குகள்: வரி விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.ரூ. 3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு எனவும், ரூ. 3 முதல் 7 லட்சம் வரைக்கான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரைக்கான வரியாக 10 சதவீதமும், ரூ. 10 முதல் ரூ. 12 லட்சத்திற்கான வரியாக 15 சதவீதமும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 20 சதவீதமும், ரூ. 15 லட்சத்திற்கு அதிகமாகும் போது 30 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டது.பழைய வரி முறை: அதிக விலக்குகள், அதிக சேமிப்புபுதிய வரி செலுத்தும் முறை போன்று இல்லாமல், பழைய முறையில் பல விலக்குகள் வழங்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குரிய வருமானத்தை குறைக்க அனுமதிக்கிறது.முக்கிய அம்சங்கள்:70-க்கும் மேற்பட்ட சலுகைகள் கிடைக்கப்பெற்றன.வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் விடுமுறை பயண கொடுப்பனவு (LTA)ரூ. 1.5 லட்சம் வரை பிரிவு 80C-இன் கீழ் விலக்கு (பி.பி.எஃப், ஆயுள் காப்பீடு, இ.பி.எஃப் போன்றவை)பிரிவு 24B இன் கீழ் வீட்டுக் கடன் வட்டி விலக்குகள்வரிச் சேமிப்புத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் கொண்ட தனிநபர்களுக்கு, பழைய வரி முறையே பயனளிக்கும்.எந்த வரி முறை உங்களுக்கு சரியானது?புதிய மற்றும் பழைய வரி முறைகளைத் தேர்ந்தெடுப்பது, வருமான நிலை மற்றும் வரி சேமிப்பு உத்திகளைப் பொறுத்தது.புதிய வரி முறை எந்த வகையில் சிறந்தது தெரியுமா?முதலீடு மூலமாக எந்தவொரு விலக்கும் பெற முடியாத நிலையில், புதிய முறை சிறந்ததாக இருக்கும்.எளிமையான வரி விதிப்பு முறையை விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.நீங்கள் ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபராக இருந்தால் இது பொருத்தமானதாக இருக்கும்.பழைய வரி முறை எந்த வகையில் சிறந்தது தெரியுமா?விலக்குகள் ரூ. 3.75 லட்சத்தை கடக்கும் போது இது ஏற்றதாக இருக்கும்.விலக்குகள் மூலம் அதிக சேமிப்பை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு இது சரியானதாக இருக்கும்.உங்களிடம் வீட்டுக் கடன்கள், காப்பீடுகள் மற்றும் பிற வரி சேமிப்பு முதலீடுகள் இருந்தாலும் இதனை பரிசீலிக்கலாம்.புதிய வரி விதிப்பு முறையானது, குறைந்த வரி விகிதங்களை விரும்புவோர் மற்றும் விலக்குகளில் அதிக முதலீடு செய்யாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் முதலீடுகள் மூலம் வரி பலன்களை அதிகரிக்க விரும்புவோருக்கு பழைய வரி முறை பொருந்தும்.2025 பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், புதிய வரி விதிப்பை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற கூடுதல் சலுகைகள் அறிமுகப்படுத்தப்படுமா என்பதைப் பார்க்க வரி செலுத்துவோர் ஆர்வமாக உள்ளனர்.