Connect with us

பொழுதுபோக்கு

முதல் வீடு அப்பாவின் கனவு… அம்மாவின் ஆசைக்காக 2-வது வீடு கட்டிய அனிதா சம்பத்; ரசிகர்கள் வாழ்த்து மழை

Published

on

Anitha Sampath 1

Loading

முதல் வீடு அப்பாவின் கனவு… அம்மாவின் ஆசைக்காக 2-வது வீடு கட்டிய அனிதா சம்பத்; ரசிகர்கள் வாழ்த்து மழை

செய்தி் வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய பிக் பாஸ் போட்டியாளர், நடிகை என பிரபலமாகி உள்ல அனிதா சம்பத் தனது அம்மாவின் ஆசைக்காக இரண்டாவது வீடு கட்டி குடிபோயிருக்கிறார். வீடு கிரகப்பிரவேச புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது, அனிதா சம்பத்துக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். அதே போல, விமர்சகர்களும் இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அனிதா சம்பத்திற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய தந்தை பெங்களூருக்கு சாய்பாபா கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், ரயிலில் வரும் வழியிலேயே மாரடைப்பால் காலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருந்த அனிதா சம்பத்துக்கு தந்தையின் மரணம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தந்தையின் இழப்பில் இருந்தும் இன்னும் மீளமுடியாமல் இருப்பதாக அனிதா சம்பத் கூறி இருக்கிறார். எத்தனை துயரம் இருந்தாலும், அனிதா சம்பத் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார். செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் போட்டியாளர், இப்போது நடிகையாக பிரபலமாகி உள்ளார். அனிதா சம்பத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, புது வீடு கட்டி இருந்தார், பிறந்ததிலிருந்து வாடகை வீட்டில் வளர்ந்து வந்த நிலையில் தன்னுடைய சம்பாத்தியத்தில் அப்பாவின் கனவை நிறைவேற்றி விட்டேன் என்று சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்திதனர். A post shared by Anitha Sampath (@official_anithasampath)இந்நிலையில், அனிதா சம்பத் அம்மாவின் ஆசைக்காக 2வது வீட்டைக் கட்டி குடிப்பெயர்ந்து உள்ளதாகக் கூறி கிரகப்பிரவேச புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.அனிதா சம்பத் கிரகப்பிரவேச புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது: “இது என்னுடைய அம்மாவின் ஆசைக்காக நான் இரண்டாவதாக கட்டிய வீடு. இந்த வளர்ச்சி உங்கள் அன்பு இல்லாமல் எனக்கு கிடைத்திருக்காது” என்று தெரிவித்துள்ளார். முதல் வீடு கட்டி அப்பாவின் கனவை நிறைவேற்றிய அனிதா சம்பத், இப்போது அம்மாவின் ஆசைக்காக 2-வது வீடு கட்டியிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன