வணிகம்
Income Tax Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Income Tax Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதாவது, மாதம் ரூ. 1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ 2,600 கோடியும் அரசுக்கு இழப்பு நேரிடும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வரி முறை அறிவிப்பு ரூ 0-4 லட்சம் வரை – வருமான வரி இல்லைரூ 4 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை 5% வருமான வரிரூ 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 10% வருமான வரி ரூ 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை 20% வருமான வரி ரூ 20 லட்சம் முதல் 24 லட்சம் வரை 25% வருமான வரி24 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.