Connect with us

இலங்கை

இலங்கை உட்பட பல நாடுகளில் காற்றின் தரம் மிக வீழ்ச்சி! மிக அவதானமாக இருக்க வேண்டுகோள்

Published

on

Loading

இலங்கை உட்பட பல நாடுகளில் காற்றின் தரம் மிக வீழ்ச்சி! மிக அவதானமாக இருக்க வேண்டுகோள்

இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளின் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் கடந்த சில நாட்களாக ‘காற்றின் தரம் வீழ்ச்சி’ என்ற விடயம் அதிகம் பேசப்படுவதைக் காண முடிகின்றது.

 வளிமண்டலத்தில் தரமான வாயுக்களின் சமநிலை குறைவடைந்து புகை, தூசுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் போன்ற பல காரணங்களால் காற்றிலுள்ள மாசுக்களின் அளவு அதிகரிக்கிறது.

Advertisement

 இதனால் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் வகையில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து, மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிப்பதற்கு ஆரோக்கியமற்ற நிலைக்கு காற்றானது செல்கின்றது.

 சுவாசிக்கக் கூடிய ஆரோக்கியமான காற்றுக்கும், சுவாசிக்கக் கூடாத ஆரோக்கியமற்ற காற்றுக்கும் வேறுபாடு யாதெனில், சாதாரணமாகவே ஆரோக்கியமான காற்றின் தரச்சுட்டெண் (Air Quality Index – AQI) பூஜ்ஜியம் தொடக்கம் 50 வரைக்கும் குறைவானதாகக் காணப்படும். இது உயிரினங்கள் சுவாசிப்பதற்கு ஏற்ற நல்ல ஆரோக்கியமான காற்றாக இருக்கும். 

ஆனால் தற்பொழுது கொழும்பு, கண்டி, குருநாகல் மாவட்டங்ளில் 118 தொடக்கம் 130 வரை காற்றின் தரச்சுட்டெண் அதிகரித்துள்ளதோடு கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் காற்றின் தரச்சுட்டெண் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization – NBRO) தெரிவித்துள்ளது.

Advertisement

 காற்றின் தரச்சுட்டெண் அதிகரித்து, காற்றின் தரம் வீழ்ச்சியடைவதற்கு புகைபிடித்தலினால் உண்டாகும் புகை, அதிக வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் புகை, விவசாயக் கழிவுகளை எரித்தல், பட்டாசு பொருட்களின் பாவனை, தொழிற்சாலைக் கழிவுகள், பழைய கட்டுமானங்கள் இடிப்பு மற்றும் புதிய கட்டுமான அதிகரிப்பு போன்ற மனித நடவடிக்கைகளே பிரதான காரணங்களாக அமைகின்றன.

இலங்கையிலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகமுள்ள சில மாவட்டங்களிலே காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகின்றது. 

காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 70 இலட்சம் பேர் தாங்கள் வாழ வேண்டிய காலத்திற்கு முன்னரே உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

இவ்வாறு, காற்றின் தரம் வீழ்ச்சியடைவதனால் கண்ணுக்குப் புலனாகாத மிகச்சிறிய துகள்கள் சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் உள்ளெடுக்கப்படுகின்றன. 

இதனால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற சுவாச நோய்களும், கண்ணுக்குப் புலனாகாத சாம்பல் காற்றில் பரவுவதால், கண் எரிச்சல், தொண்டை, தலைவலி மற்றும் தோல் நோய்களும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்படைதல் போன்றனவும் ஏற்படுகின்றன.

தூசு, புகை, சாம்பல் போன்றன தாவரங்களின் மீது படிவதனால் ஒளித்தொகுப்பு நடைபெறுவது தடைப்படுகின்றது. இதனால் தாவரங்கள் மட்டுமன்றி, மறைமுகமாக விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. 

Advertisement

மேலும் ஆரோக்கியமற்ற காற்றின் காரணமாக அமிலமழை பொழிவதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியின்றி உயிரிழக்கின்றன.

காற்றின் தரம் வீழ்ச்சி அடையும் போது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கமானது, நபர் ஒருவர் பல சிகரட்டுகளை புகைத்தால் எந்தளவிற்கு பாதிப்புகள் ஏற்படுமோ, அந்தளவிற்கு பாதிப்புகள் எற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காற்றின் தரம் வீழ்ச்சியடைவதை உடனே தடுக்க முடியாவிட்டாலும், ஆரோக்கியமற்ற காற்றின் பாதிப்பிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

Advertisement

அந்த வகையில், காற்றின் மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக நேரம் வெளியில் செலவிடுவதைத் தவிர்த்தல், ஆரோக்கியமற்ற காற்றின் மூலம் பரவுகின்ற கண்ணுக்குப் புலனாகாத தீங்கு விளைவிக்கும் துகள்கள் உள்ளிழுப்பதைக் தவிர்த்துக்கொள்ள N95 முகமூடிகள் அல்லது அதைப் போன்ற பாதுகாப்பான முகமூடிகளை அணிதல், ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருத்தல், சுவாசிப்பதில் யாரேனும் சிரமங்களை அனுபவித்தால் அவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெறுதல் சிறந்ததாகும். 

நன்றாக தண்ணீர் குடிப்பது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே இது போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமற்ற காற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புக்களிலிருந்து அனைவரையும் பாத்துகாத்துக் கொள்ள முடியும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன