Connect with us

இலங்கை

இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

Published

on

Loading

இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சம்பவத்தில்  மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பொல்வத்த கொல்லாகே நவோத் கிம்ஹான் எனும் இளைஞரே மாயமாகியுள்ளார்.

Advertisement

மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன்

சம்பவத்தில் மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

காணாமல்போன இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591691 அல்லது 071 – 8594360 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன