Connect with us

பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த மனு: கூகுள் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு!

Published

on

Aishwarya rai aughter

Loading

ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த மனு: கூகுள் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு!

சமூகவலைதளங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம் கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களின் முக்கியமானவர் அமிதாப் பச்சன். முன்னணி நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர். தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த வேட்டையன் திரைப்படத்தில் அவரின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார். 13 வயதாகும் ஆராத்யா பச்சன் குறித்து அவ்வப்போது இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில், ஆராத்யா பச்சன் சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊடகங்களில் தன்னை பற்றி தவறான தகவல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார், இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, கூகுள், மற்றும் பாலிவுட் டைம் இணையதளங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன