Connect with us

விளையாட்டு

வீடியோ: நாக்பூர் சென்றடைந்த ரோகித் அண்ட் கோ… முதல் ஒருநாள் போட்டி எப்போது?

Published

on

video Rohit Sharma Virat Kohli Arrive In Nagpur For IND vs ENG ODI Series pitch report Tamil News

Loading

வீடியோ: நாக்பூர் சென்றடைந்த ரோகித் அண்ட் கோ… முதல் ஒருநாள் போட்டி எப்போது?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி 6 ஆம் தேதி நாக்பூரிலும், 2-வது போட்டி 9 ஆம் தேதி கட்டாக்கிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 12 ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.டி-20 தொடரை சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி நிலையில், ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்ற நினைக்கும். மேலும், வருகிற 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோட்டமாகவும் இந்தத் தொடர் பார்க்கப்படும். இந்தத் தொடரில் ஜொலிக்கும் வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் வாய்ப்பை பெறுவர். அதனால், இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட விரும்புவர்.  இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க ரோகித் சர்மா மற்றும் இந்திய வீரர்கள் நாக்பூர் வந்தடைந்துள்ளனர்.  டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தை விமானம் மூலம் வந்தடைந்த இந்திய வீரர்கள் அங்கிருந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். INDIAN CAPTAIN ROHIT SHARMA & HIS TEAM ARRIVES IN NAGPUR…!!!!- It’s time for ODI series. [RevSportz] pic.twitter.com/Etm3vQfi80நாக்பூர் பிட்ச் ரிப்போர்ட் மகாராஷ்டிரா மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான நாக்பூர், ஆரஞ்சுப் பழங்களுக்குப் புகழ்பெற்ற நகரமாகும், மேலும் இது வலதுசாரி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைமையிடமாகும். நாட்டின் பத்தாவது டெஸ்ட் மைதானம் தான் விதர்பா கிரிக்கெட் சங்கம் நிர்வகிக்கும் மைதானம். சாலையில் இருந்து நேராக மைதானத்திற்குள் நடக்கக்கூடிய ஒரே சர்வதேச மைதானமும் இதுதான். மேலும், இந்த மைதானம் பல்வேறு காரணங்களுக்காக எப்போதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. 1987 ரிலையன்ஸ் உலகக் கோப்பையின் இறுதி லீக்கில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, சுனில் கவாஸ்கர் தனது ஒரே ஒரு நாள் மற்றும் உலகக் கோப்பை சதத்தை இங்கே தான் பதிவு செய்தார். சச்சின் டெண்டுல்கருக்கு இது இரண்டாவது சிறந்த மைதானம். சதங்கள் என்று வரும்போது, சேப்பாக்கத்தில் அவர் 4 விளாசியிருக்கும் நிலையில், இங்கு 3 சதங்களை பதிவு செய்துள்ளார். 1995 இல், இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தின் போது, ​​கிழக்கு ஸ்டாண்டில் செங்கல் சுவர் இடிந்து ஒன்பது பேர் இறந்தது இந்த மைதானத்தின் இருண்ட நேரம்.ஆடுகளத்தைப் பொறுத்தவரை, முன்பு, பி.சி.சி.ஐ-யால் நியமிக்கப்பட்ட பிட்ச் கமிட்டி 1999 ஆம் ஆண்டில் ஆடுகளத்தை மீண்டும் திருத்துவதற்கு பரிந்துரைக்கும் வரை, இது மற்ற எந்த மென்மையான ஆடுகளத்தையும் போலவே இருந்தது. ஆடுகளம் மீண்டும் வடிவமைத்த பின்னர் அது தனது உண்மையான வடிவத்தைப் பெற சிறிது காலம்  பிடித்ததுஇந்த ஆடுகளத்தைப் பற்றிய தனித்துவமான விஷயம் 30 அங்குல ஆழமான இரட்டை செங்கல் அடுக்குதான். பொதுவாக ஆடுகளத்தில் 15 அங்குல செங்கல் அடுக்கு தான் இருக்கும். இது கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் பெற உதவுகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்வதற்காக, மூன்றாவது டெஸ்டில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்திய மைதானமும் இதுதான். உள்ளூர் விமர்சகர்கள், கியூரேட்டர் சொந்த அணியின் காரணத்தை புறக்கணித்து, எதிரணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிய வேகமான விக்கெட்டை எவ்வாறு தயார் செய்தார் என்பதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால் கியூரேட்டர் தான் பிட்ச் பேனலின் வழிமுறைகளைப் பின்பற்றியதாக தெரிவித்தனர். இன்று நாக்பூர் உண்மையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேகம் மற்றும் இயக்கத்தில் உதவக்கூடிய ஒரே மைதானமாக உள்ளது மற்றும் 2004-05 சீசனில் இங்கு நடந்த பல முதல்-தர ஆட்டங்களில் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை சரமாரியாக வீழ்த்தியதால் பல போட்டிகள் மூன்று நாட்களுக்குள் முடிவடைந்தது என்பது நினைவுகூர்த்தக்கது.  இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி:ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன