சினிமா
இதற்கு பெயர்தான் Nepotism_ மா..? மாளவிகா மோகன் உடைத்த உண்மை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இதற்கு பெயர்தான் Nepotism_ மா..? மாளவிகா மோகன் உடைத்த உண்மை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் மாளவிகா மோகன். அதன் பின்பு விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இதை தொடர்ந்து தனுசு உடன் மாறன், சீயான் விக்ரமுடன் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தற்போது கார்த்தி நடிக்கும் சர்க்கார் 2 படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றார். இவருக்கு என்று ஏராளமான ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.d_i_aஇந்த நிலையில், மாளவிகா மோகன் அளித்த பேட்டி ஒன்றில், தான் கூலி படத்தில் நடிக்க வேண்டியது.. ஆனால் அந்த படம் மிஸ் ஆகிவிட்டது. அதற்கு என்ன காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கச்சியாக நடித்தேன். அதன் பின்பு ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு கமல் மேல் உள்ள அன்பால் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனுக்கு சென்று விட்டது என அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.தமிழில் இவர் நடித்த பேட்ட, மாஸ்டர், தங்கலான் ஆகியபடங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. தற்போது கார்த்திக் நடித்து வரும் சர்க்கார் 2 திரைப்படமும் அவருக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..