இலங்கை
உள்ளூராட்சித் தேர்தல்: இன்னும் தீர்மானமில்லை

உள்ளூராட்சித் தேர்தல்: இன்னும் தீர்மானமில்லை
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் சட்டவரைபில் சபாநாயகர் ஒப்பமிட்ட பின்னரே தேர்தல் நடத்துவது பற்றி தீர்மானிக்கலாம். அதுவரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மனு மீதான விசாரணைகள் இரகசியமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணையின் தீர்ப்பும் பகிரங்கமாக வெளியிடப்பட மாட்டாது. நேரடியாக சபாநாயகருக்கே அனுப்பி வைக்கப்படும்.
இந்த மனுவை தாக்கல் செய்தவர், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டவரைவு மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மையுடன், சர்வசன வாக்கெடுப்பும் நடத்தியே நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் – என்றார்.